1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 மார்ச் 2025 (10:03 IST)

அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பயன்? - தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தவெக விஜய் எடுத்த முடிவு!

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “2026ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற உள்ள இந்த தொகுதி மறுசீரமைப்பு குறித்த தெளிவான விளக்கமோ, வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

 

இந்த தொகுதி மறுசீரமைப்பு முஐயில் மாநிலங்களின் மக்கள் தொகை என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிட்டாலும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. புதிய மக்கள் தொகை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அல்லது ஒரு முக்கிய அளவுகோலாக கொண்டு நடத்தப்படும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் ஆபத்து உள்ளது.

 

தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதே அனைத்து உறுப்பினர்களும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட் நாடாளுமன்றத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பயன்?

 

மக்களின் இன்றைய அடிப்படை பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி, மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவைதான். நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றாக்குறை ஒரு மக்கள் பிரச்சினையே இல்லை.

 

நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை அழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும். இந்த முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K