ரயில்வே தேர்வில் மோசடி.. 26 பேர் கைது.. ஒரு கோடி பணம் கைமாறியதா?
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் லோகோ பைலட் பதவிக்கு தேர்வு செய்ய நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், வினாத்தாளை கசிய விடும் மோசடி நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஐ ரகசிய விசாரணை நடத்தியதில், ரயில்வே தேர்வு கேள்வித்தாளை தயாரித்தவர் கையால் கேள்விகளை எழுதி, அதை பணத்திற்காக வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஒன்பது ரயில்வே அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையால் எழுதிய வினாத்தாளை, ஒரு எஞ்சின் டிரைவரிடம் வழங்கியதாகவும், அந்த நபர் ஹிந்தி மற்றும் வேறு சில மொழிகளில் வினாத்தாள்களை தயாரித்து விநியோகம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் ரூ.1 கோடி 17 லட்சம் ரூபாய்க்கு இந்த மோசடி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிடிபட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த சம்பவத்தில் யார் தொடர்பில் உள்ளனர் என்பதற்கான விசாரணை தொடருகிறது.
Edited by Siva