1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 மார்ச் 2025 (10:09 IST)

கூட்டுமுயற்சியில் ஒருங்கிணையும் ஜெமினி எடிபில்ஸ் & பேட்ஸ்

annapoorna

இந்தியா மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் அன்னபூர்ணா மசாலா தயாரிப்புகளை இந்தியாவெங்கும் விநியோகிப்பதே இக்கூட்டுமுயற்சியின் நோக்கமாகும்

 

சென்னை, மார்ச் 4, 2025: அகில இந்திய அளவில் 21.7% சந்தைப் பங்கினைக் கொண்டு இந்தியாவின் நம்பர் 1 சன்ஃபிளவர் ஆயில் (சூரிய காந்தி எண்ணெய்) நிறுவனமாக திகழும் ஜெமினி எடிபில்ஸ் & பேட்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் இந்நாட்டின் தொன்மையான மசாலா தயாரிப்பு பிராண்டுகளுள் ஒன்றான, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து ஜெப்ஃ (GEF) ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டுமுயற்சி நிறுவனத்தை உருவாக்கியிருக்கின்றன.


மசாலா தயாரிப்புகள், மீல் மிக்ஸ்கள் மற்றும் தொடர்புடைய இன்னும் பல தயாரிப்பு பொருட்களை தயாரித்து விநியோகிப்பதே இக்கூட்டு முயற்சி நிறுவனத்தின் நோக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக இத்தொழில்துறையில் இயங்கி வரும் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் பிராந்திய உணவுப் பொருட்களின் துல்லியமான சுவைகளின் சாரத்தை கைவசப்படுத்தி நாடெங்கிலும் வீட்டில் சமைக்கப்படும் உணவின் உண்மையான மற்றும் பாரம்பரிய சுவையை உறுதி செய்து வருகிறது. இந்த பிராண்டின் சிறப்பு தயாரிப்புகளுள் பியூர் ஸ்பைசஸ், பிராந்திய கலவைகள், கலவை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் மற்றும் பிரியாணி மசாலாக்கள் ஆகியவை உள்ளடங்கும்.

 

ஜெமினி எடிபில்ஸ் & பேட்ஸ் இந்தியா லிமிடெட்-ன் குழும துணைத் தலைவர் திரு. அக்ஷய் சௌத்ரி இந்த கூட்டுமுயற்சி நிறுவனம் குறித்து கூறியதாவது: "ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் உடன் கைகோர்த்து செயல்படுவதிலும் ஜெப்ஃ (GEF) ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பதனை தொடங்குவதிலும் நாங்கள் அளவிலா உற்சாகம் கொண்டிருக்கிறோம். தொழில்முறை நேர்த்தியின் மிக உயர்ந்த தரஅளவுகளை எமது இரு நிறுவனங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன. சமையல் செய்வது மற்றும் உணவுண்பது என்ற இரு அம்சங்களிலும் நிகரற்ற சுவை அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில் நமது செழுமையான சமையற்கலை சார்ந்த கலாச்சாரத்தை பெருமிதத்துடன் இத்தயாரிப்புகள் மூலம் கொண்டாடுவதும் எமது நோக்கமாகும்." ஜெமினி எடிபில்ஸ் & பேட்ஸ் இந்தியா லிமிடெட், ஸ்பைசஸ் எனப்படும் மசாலாப் பொருட்கள் பிசினஸ் பிரிவில், ஜெப்ஃ (GEF) ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் வழியாக நுழைவது அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்தும் உத்தியின் ஒரு அங்கமாகும்.


இது தொடர்பாக அதன் விற்பனை மற்றும் சந்தையாக்கலுக்கான முதுநிலை துணைத் தலைவர் திரு. சந்திர சேகர ரெட்டி கூறியதாவது: "ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கையை பெற்ற மிக பிரபலமான பிராண்டாகும். நுகர்வோர்களின் வேறுபட்ட தேவைகளையும், சுவைகளையும் பூர்த்தி செய்ய பல்வேறு மசாலா தயாரிப்புகளின் முழு தொகுப்பையும் இது வழங்கி வருகிறது. 50 ஆண்டுகள் என்ற வளமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் அன்னபூர்ணா மசாலாக்கள் மற்றும் நறுமணப் பொருட்கள், செழுமையான பாரம்பரியம் கொண்டவை. இந்த கூட்டு முயற்சியானது, ஜெப்ஃ இந்தியா நிறுவனத்தின் ஆழமான சந்தை அறிவு, அனுபவம் மற்றும் விநியோக வலையமைப்பின் மூலம் ஆதாயம் பெறும்; அன்னபூர்ணா மசாலாக்கள் அதன் செயலிருப்பை நாடெங்கிலும் வேகமாக வளர்க்கவும், விரிவாக்கவும் இது உதவும்".

 

ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ்-ன் நிர்வாக பங்குதாரரும் மற்றும் ஜெப்ஃ ஃபுட் இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் தலைமை செயலாக்க அதிகாரியுமான திரு. விஜய் பிரசாத் இக்கூட்டு முயற்சி குறித்து பேசுகையில், "நுகர்வோர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான மசாலாப் பொருட்களை வழங்கும் குறிக்கோளோடு ஜெப்ஃ இந்தியா நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மசாலாக்கள் மற்றும் நறுமணப்பொருட்கள் தொழில்துறையில் ஒரு முன்னோடி என புகழ்பெற்றிருக்கும் நாங்கள் மிகச்சிறந்த தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவோம். ஜெப்ஃ இந்தியாவின் வலுவான விநியோக வலையமைப்பின் ஆதரவோடு அன்னபூர்ணா மசாலாக்கள் இனி இந்தியாவெங்கிலும் விரைவில் கிடைக்கப்பெறும். சமையல் கலாச்சாரம் வளர்ந்து வருகின்ற நிலையில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும், மின்-வர்த்தக தளங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் ஆர்கானிக் மற்றும் பிரீமியம் மசாலாப் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அன்னபூர்ணா பிராண்டு, எப்போதும் மிகச்சிறந்த தரத்தோடு பார்க்கப்படுகிறது. தரமான வாடிக்கையாளர்களோடு  இணைத்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது மற்றும் சூழல் தோழமைக் கொண்ட பேக்கேஜிங் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நற்பெயரை இன்னும் நாங்கள் வலுவாக கட்டமைக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.