1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (15:17 IST)

நிலாவுக்கு போகும் தாத்தா..! நிலவுக்கு செல்லும் முதல் விண்வெளி சுற்றுலா பயணி!

Dennis Tito
நிலவுக்கு இதுநாள் வரை விண்வெளி வீரர்கள் மட்டுமே பயணம் செய்துள்ள நிலையில் முதன்முறையாக முதியவர் ஒருவர் சுற்றுலாவுக்கு செல்ல உள்ளார்.

ஆரம்பகாலத்தில் விண்வெளி பயணம் என்பது அதிக பண செலவையும், ஆபத்தையும் கொண்டதாக இருந்தது. இருந்தும் பல விண்வெளி வீரர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பல விண்வெளி பயணங்களை மேற்கொண்டு விண்வெளி அறிவியலில் மனித இனத்தை மேம்பட செய்தனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் விண்வெளி பயணம் கமர்ஷியலாக மாறி வருகிறது. பல பணக்காரர்கள் விண்வெளி சுற்றுலா சென்று வர விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார்போல ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவுக்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.

SpaceX


அப்படியாக தன்னை நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம் செய்துள்ளார் டென்னிஸ் டிட்டோ. தொழிலதிபரான டென்னிஸ் டிட்டோ ஏற்கனவே 2001ல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்று வந்தவர். தற்போது 2021ல் இவர் எலான் மஸ்க்குடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டென்னிஸ் டிட்டோவை நிலவிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அழைத்து செல்ல வேண்டும்.


பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்கர் மற்றும் மிகவும் வயதான நபர் என்ற சாதனையை படைத்தவர் ஜான் கிளௌன். அப்போது அவருக்கு வயது 77. ஆனால் தற்போது டென்னிஸ் டிட்டோவுக்கு வயது 82 ஆகிறது. நிலவு பயணத்திற்குள் அவருக்கு 87 வயதாகும் என்றாலும் கூட விண்வெளி பயணம் செய்த மிகவும் வயதான நபர் மற்றும் நிலவில் கால் வைத்த முதல் தாத்தா என்ற பெருமையையும் டிட்டோ அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Prasanth.K