சூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிகாரத்தில் ராணுவம்! – ராஜினாமா செய்த பிரதமர்!
சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்த நிலையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த அக்டோபர் மாதம் ஆட்சியை கலைத்த ராணுவம் நாட்டை கைப்பற்றியதுடன், பிரதமர் அப்தல்லாவை வீட்டு சிறையில் வைத்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அப்தல்லா பிரதமர் ஆக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து தற்போது பிரதமர் அப்தல்லாவும், ராணுவமும் ஆட்சி பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது மக்களிடையே எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் பிரதமர் அப்தல்லா ராஜினாமா செய்துள்ளார். இதனால் சூடானை முழுமையாக ராணுவம் கைப்பற்றியுள்ளது.