1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:00 IST)

தந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் கைது

டெல்லியில் ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தன் தந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஆனந்த் பர்பத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ஷர்மா. இவர் தன் வீட்டில் கடந்த 3 ஆம் தேதி படுக்கையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஜிதேந்திர சர்மாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், இந்த மரணம் இயற்கையானது என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அதில், ஷர்மா மற்றும் அவரது மகன் சுமித் ஆகிய இருவரும் சம்பவத்தன்று காலை முதல் 11 குவாட்டர் மது அருநதியதாகவும், பின், மாலையில் தந்தை சிறு நீர் கழித்ததால், ஆத்திரமடைந்திய சுமித் அவரை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டதாக  போலீஸார் தெரிவித்துள்ளனர்.