டெல்லி:15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருட்டு
டெல்லியில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலை நகர் டெல்லியில், கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஒரு சிறுமி குடல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 24 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யபட்டது. பின்னர், 26 ஆம் தேதி வர் இறந்திவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையி, சிறுமியின் உடலை உறவினர்கள் வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதாக சந்தேகத்தில், போலீஸில் புகாரளிதிதனர்.
அதன்பின்னர், டெல்லி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
அறுவை சிகிச்சையின் போது, இறந்த சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக புகார் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.