வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (12:11 IST)

வீட்டுக்குள் விழுந்த இந்திய விமானப்படை விமானம்.. 2 பெண்கள் பலி..!

Flights
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் வீட்டுக்குள் விழுந்து நொறுங்கியதை அடுத்து அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்கர் என்ற பகுதியின் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 என்ற விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. 
 
அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அந்த பகுதியில் உள்ள வீட்டில் விழுந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
 
ஆனால் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran