1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Six inch alien body found in sili

ஆறு அங்குல உயரமுள்ள ஏலியனின் உடல் கண்டு பிடிப்பு - ஆச்சர்ய தகவல்

Sili
வெறும் ஆறு அங்குல உயரமுள்ள ஏலியன்கள் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.


 

 
ஏலியன்கள், பறக்கும் தட்டு என்று நாம் கேள்விபட்டிருந்தாலும் யாரும் இன்னும் எதையும் கண்ணில் பார்த்ததில்லை. பறக்கும் தட்டை மட்டும் அவ்வப்போது பார்த்ததாக சிலர் கூறுவதுண்டு. வேற்று கிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென்றே பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு செலவு செய்து வருகிறது.
 
இந்நிலையில் சிலி நாட்டு மலைப்பகுதியில் சுமார் 6 அங்குல உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்றை சமீபத்தில் ஆஸ்கர் முனோல்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். அதன்பின் இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்ட போது, அந்த பகுதியில் அதுபோல் பல எலும்புக்கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
அந்த எலும்புக்கூடுகள் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, அதன் உடலில் உள்ள எலும்புகளோடு பூமிக்கு தொடர்பில்லாத உலோக கலவை கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
அதன்பின், வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுடன் இணைந்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம், அவைகள் வேற்றுக்கிரகவாசிகள் எனவும், அவைகள் பூமிக்கு வந்து சென்றுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திர தொகுதியில் வசிப்பவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
 
இது ஏலியன் தொடர்பான ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விண்வெளியில் ஏலியன்கள் வசிக்கின்றன என்பது உறுதியாகியுள்ளது.

About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
ஓடும் மின்விசிறியை நாக்கால் நிறுத்தி சாதனை செய்த பெண் - வீடியோ