1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. gold company shares gone down becasue of modi

தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...

modi gold
சமீப காலமாகவே இந்தியாவின் பொருளாதாரம் கருதி தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள்.. தங்கத்தை வாங்காதீர்கள் என இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இதே கருத்தை கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் இதே கருத்தை தெரிவித்திருந்தார்..

காரணம் இன்றியோ, அவசியம் இல்லாமலோ தங்கம் வாங்க வேண்டாம்.. அதேபோல் இந்தியாவிலேயே திருமண நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.. வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்.. அதேபோல், பொழுதுபோக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்.. சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. இன்னும் இந்திய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.. நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.. இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும்’ என அவர் கூறியிருந்தார்

அவசியமின்றி தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்திய நினைவில் பங்குச்சந்தையில் முக்கிய நகை நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் சரிவை சந்தித்திருக்கிறது. கல்யாண் ஜூவல்லர்ஸ் 4.8 சதவீதமும், டைட்டன் 1.3 சதவீதமும், தங்கமயில் ஜுவல்லரி 1.7 சதவீதமும் சரிவை சந்தித்திருக்கின்றன..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..