1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay gifted sun glass to old lady

மேட்டூரில் மூதாட்டிக்கு விஜய் பரிசளித்த சன் கிளாஸ்!.. விலை என்ன தெரியுமா?..

viijay
முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மேட்டூர் அணையை திறப்பதற்காக மேட்டூருக்கு சென்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்ற விஜய் அங்கிருந்து காரில் மேட்டூர் சென்றார். சேலத்திலும், மேட்டூரிலும் அதிகாரிகளும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

viijay

பட்டு வேட்டி சட்டையில் சென்ற முதல்வர் விஜய் 11 மணியளவில் திறக்கப்பட்ட நீரில் மலர்களை தூவினார். இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இன்று காலை முதலே சமூகவலைத்தளங்களில் வைரலானது. 

vijay

அதிலும், தண்ணீரை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார். அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.

அந்த கண்ணாடியின் விலை ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாள வெள்ளம்!.. ஒரே வீட்டில் 23 உடல்கள்.. 1000 பேர் பலி!..