1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. lady in green house in nepal flood interview

ரொம்ப பயந்துட்டோம்!.. மறுபிறவி எடுத்திருக்கோம்!.. நேபாளத்தின் பச்சை வீட்டின் உரிமையாளர் பேட்டி..

nepal
பனிச்சரிவு காரணமாக வடக்கு நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் 4 ஊர்களில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்கள் என எல்லாவற்றையும் வாரி சுருட்டிக் கொண்டு சென்றது.  வெள்ளத்தில் சிக்கி 800க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. அதேநேரம் எல்லா வீடுகளும் நீரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேபாளத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் இருந்த ஒரே ஒரு பச்சை நிற வீடு மட்டும் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது.. அவ்வளவு வெள்ளத்திலும் அந்த வீடு நீரில் அடித்து செல்லப்படவில்லை. அந்த வீட்டில் இருந்த மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். வெள்ளம் வேகமாக ஓடியபோது உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவர்கள் அங்கு உதவிக்காக காத்திருந்தனர். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலானது. அதைப்பார்த்த பலரும் அந்த வீட்டில் இருப்பவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்..

nepal
அவர்கள் பிரார்த்தனை பலனளித்து அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில்,  அந்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி பாண்டே செய்தியாளர்களிடம்  பேசிய போது ‘வெள்ளம் வந்தபோது எங்க வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம். பக்கத்தில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை பார்த்து மிகவும் பயந்து விட்டோம்..

எங்கள் வீடு மட்டும் இடிந்து விழாதது கடவுளின் செயல்தான்.. நான்கைந்து பேர் சேர்ந்து தங்களை உயிரை பணயம் வைத்து எங்களை மீட்டு விட்டனர். நாங்கள் இப்போது மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கிறோம்.. இறைவன் எங்களுக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என அவர் பேசியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மேட்டூரில் மூதாட்டிக்கு விஜய் பரிசளித்த சன் கிளாஸ்!.. விலை என்ன தெரியுமா?..