1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (21:10 IST)

சிங்கப்பூர்: வணிக வளாகத்தில் தமிழர் கீழே தள்ளி கொலை !

சிங்கப்பூர் நாட்டில், ஒரு வணிக வளாகத்தில் இருந்து தமிழர் ஒருவரை கீழே தள்ளிவிட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சிங்கப்பூர் நாட்டில் பிரதமர்  லீ சியன் லூங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஏராளமான தமிழர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு,  ஆர்ச்சர்டு சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்,  தேவேந்திரன் சண்முகம்(34) என்ற தமிழர் படிக்கட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முகமது அஸ்பரி அப்துல் கஹா (27) என்ற நபருடன் சண்முகத்திற்கு தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதில்,. ஆத்திரமடைந்த முகமது, தேவேந்திரன் சண்முகத்தை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படும் நிலையில், சண்முகம் படிக்கட்டியில் இருந்து கிழே விழுந்து, தலையில் அடிப்பட்டு, ரத்தவெள்ளத்தில் இருந்தார்.

அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.