1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (14:59 IST)

இந்திய யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் புகார்!

abuse
சிங்கப்பூர்  நாட்டில் இந்திய யோகா பயிற்சியாளார் மீது 5 இளம்பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு  தீவு நாடு சிங்கப்பூர். இந்த நாட்டில் பிரதமர்  லீ ஹேசன் லூங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திலக் ஆயெர் பகுதியில்,டிரஸ்ட் யோகா என்ற பெயரில் ஒரு யோகா பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில்,  இந்தியரான ராஜ்பால் சிங்(33) யோகா பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்ந்த அவர் மீது  5 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு  ராஜ்பல் சிங் தனக்குப் பாலியல் தொல்லை செய்ததாக ஒரு 25 வயது பெண், பயிற்சி முடிந்து வெளியே வந்த பின், தன் வாட்ஸ் ஆப் மூலம் தன் தோழிகளிடம் ப் புகார் கூறினார்.

இதையடுத்து, அப்பெண், அப்பயிற்சி மையத்தின் உரிமையாளார் கனகராஜிடமும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அப்பெண் தான் பாதிக்கப்பட்டதை தன் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இப்பதிவைப் பார்த்த இன்னொரு பெண்ணும் பயிற்சியாளார் ராஜ்பால் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல் மேலும் 3 பெண்களும் அதே நபர் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண்கள் தனித்தனியாகப் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய தகவல் வெளியிட நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், இன்று பயிற்சியாளர் ராஜ்பால் சிங்கிடம் விசாரணை நடக்கும் என தெரிகிறது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.