செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (12:12 IST)

இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநெள இணைப்பு; இரு நாட்டு மக்கள் மகிழ்ச்சி..!

upi paynow
இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநெள இணைப்பு; இரு நாட்டு மக்கள் மகிழ்ச்சி..!
இந்தியாவின் யூபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநெள ஆகிய இரண்டு பண பரிமாற்ற செயலிகள் இணைக்கும் பணி தொடங்கி உள்ளதை அடுத்து இரு நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் இந்த இணைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது 
 
இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் எளிய முறையில் குறைந்த செலவில் பணம் பரிமாற்றம் செய்து பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கி வரும் பேநெள செயலி, இந்தியாவின் யூபிஐ  தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பும் முறை எளிமையாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran