1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (20:28 IST)

நடிகராகிறார் லோகேஷ் கனகராஜ்.. யாருடைய படத்தில் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன இது குறித்த புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 
 
லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி வேறு சில பிரபலங்களும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் வேறு ஒரு இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
 
Edited by Siva