1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (14:52 IST)

உலகம் அழியும் நாள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை; டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் மாற்றியமைப்பு

உலகம் அழியும் நாள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை; டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் மாற்றியமைப்பு
மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
அமெரிக்கா சிகாகோ பலகலைக்கழகத்தில் மனித நடவடிக்கைகளால் உலக அழிவை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலக சூழலை பொறுத்து இதில் விஞ்ஞானிகள் நேரத்தை மாற்றியமைத்து வருகின்றனர்.
 
தென் சீனக்கடல் பிரச்சனை, பருவநிலை மாற்றங்கள், வடகொரியா - அமெரிக்கா இடையே அணு ஆயுதப் போர் பதற்றம் போன்ற பிரசனைகளால் உலகம் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும், உலக அழிவில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்று விஞ்ஞானிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.