ஆன்மீக அரசியல் பேச நிறைய விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்: ராமதாஸ் கிண்டல்!
கடந்த 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் ஈடுபாடு குறித்தும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக அவரது ஆன்மீக அரசியல் குறித்து பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஆன்மீக அரசியல் குறித்துப் பேச தமிழகத்தில் நிறைய விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கலாம் என்றார்.
மேலும் ரஜினிகாந்த்தை பாஜக இயக்குகிறதா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் சொல்வதைக் கேட்டு ரஜினி சினிமாவில் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டார். அதனை நான் பாராட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.