செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (17:49 IST)

புற்றுநோயை குணப்படுத்தும் எலி; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

எலியின் உதவியுடன் தோல் புற்றுநோயை குண்ப்படுத்தும் வழிமுறையை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். எலியின் உதவியுடன் மனிதர்களின் தோல் நோயை குணப்படுத்த முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.
 
எலியின் ஸ்டெம் செல்களில் இருந்து ரோமங்கள் அடர்ந்த தோலை எடுத்து அதை வளர்த்துள்ளனர். அதைக்கொண்டு மனிதர்களின் தோல் நோயை குணப்படுத்தும் முடுயும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக தோல் புற்றுநோய் மருத்துவத்தில் இதை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். மரபணு பொறியியல் முறையில் இது சாத்தியமாகி உள்ளது.