1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Sam Altman again joined in open ai company

இரண்டே நாள் தான்.. டிஸ்மிஸ் செய்த சாம் ஆல்ட்மேனை மீண்டும் அழைத்து கொண்ட ஓபன் ஏஐ நிறுவனம்..!

சாட் ஜிபிடி
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாட் ஜிபிடியை கண்டுபிடித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் என்பவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரை ஓபன் ஏஐ அழைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவர் சாம் ஆல்ட்மேன். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னாள் அவர் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய மைக்ரோசாப்ட் நிறுவனம் அவரை  வேலைக்கு அழைப்பு விடுத்தது. அவர் இன்னும் ஒரு சில நாட்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஓபன் ஏஐ நிறுவனம் மீண்டும்  சாம் ஆல்ட்மேனை வேலைக்கு சேர்த்துக் கொண்டதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட முந்தைய பதவியை மீண்டும் அவருக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஓபன் ஏஐ  நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்