வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (15:47 IST)

என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி.. திருச்சியில் பரபரப்பு..!

திருச்சியில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சனமங்கலம் அருகே ரவுடி ஜெகன் என்பவர் போலீசாரால் சற்று முன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. ரவுடி ஜெகன், காவல் உதவி ஆய்வாளர் வினோத் என்பவரை தாக்க முயன்றதாகவும் இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

வுடி ஜகன் மீது ஏற்கனவே திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது

திருச்சியில் ரவுடி ஜெகன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva