1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மே 2022 (09:44 IST)

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க?

இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார். 

 
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்‌ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்‌ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஒரு  வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார். 
 
அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் மறுத்துவிடவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார். 
 
பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.