செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 மே 2022 (16:25 IST)

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை

savendhra silva
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை
இலங்கையில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ராணுவ தளபதியின் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட இருப்பதாகவும் ராணுவ தளபதி கூறியுள்ளார் 
 
அவரது இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது