ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர், புதிய அரசாங்கம்: கோட்டாபய ராஜபக்ச!
ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் போராட்டம் கட்டுக்குள் வராததால் இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ராணுவ தளபதியின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட இருப்பதாகவும் ராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை சுட்டுத்தள்ள உத்தரவிடபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்ள தயாராக இருப்பதாக கோத்தபய அறிவித்தார். இலங்கையில் நேற்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.