1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Rajapaksa ruling coalition loses parliamentary majority

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது ராஜபக்சே அரசு!

Rajapaksa
103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு. 

 
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ராஜபக்‌ஷே தவிர்த்து பிற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் புதிய அமைச்சர்கள் பதவி நியமனம் செய்யப்பட்டனர்.
 
தொடர்ந்து இலங்கை அரசியல் சூழல் ஸ்திரத்தன்மையற்று போயுள்ள நிலையில் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவளித்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.
 
இந்நிலையில் இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இலங்கையில் 40-க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு. 
அடுத்த கட்டுரையில்
ரூ.3000 + 1000 சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ள போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி!!