இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்..!
இந்தோனேஷியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதை பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
## இந்தோனேசியாவின் தலாவத் தீவின் மேற்கு கடற்கரையில், சுலாவெசி நகரத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்க நேரத்தில் உறுதியான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது திறந்த வெளியில் செல்லவும் என்றும், மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்களில் இருந்து விலகி இருங்கள் என்றும், உயரமான கட்டிடங்களில் இருந்து விலகி இருங்கள் என்றும், * நிலநடுக்கம் நின்ற பிறகு, சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva