வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (13:52 IST)

ஆருத்ரா மோசடி வழக்கு: லாபம் பார்த்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்த முடிவு..!

arudhra
கடந்த சில நாட்களாக ஆருத்ரா மோசடி வழக்கு குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த நிறுவனத்தில் லாபம் பார்த்த மக்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 600 கோடி வரை லாப பணம் பொதுமக்களுக்கு சென்றுள்ளதாக பொருளாதார குற்றம் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  ஒரு லட்சம் முதலீடு செய்து ஒரு வருடத்தில் மூன்று லட்சம் லாபம் எடுத்து விட்டு அதன் பின்னர் முதலீடு செய்யாமல் லாபத்துடன் சென்றவர்கள் குறித்து விசாரணை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் லாபம் சம்பாதித்த பொதுமக்கள் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருவதாகவும்  இந்த பட்டியல் எடுத்து முடித்தவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Edited by Mahendran