1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (17:07 IST)

ஜப்பான் நிலநடுக்கம்..! பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு.!! மீள முடியாமல் தவிக்கும் மக்கள்..!!

earth quake
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
 
புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினர். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.
 
இஷிகாவா மற்றும் நிகாட்டா ஆகிய மாகாணங்களை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் ஜப்பான் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. மேலும் 79 பேர் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.