இந்தியா - நேபாளம் இடையே ரயில் சேவை! மக்கள் மகிழ்ச்சி! – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
இந்தியா – நேபாளம் இடையே 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏராளமான இந்து புனித தலங்கள் உள்ள நிலையில் இந்திய மக்கள் பலரும் நேபாளத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முன்னர் சர்மா ஒலி நேபாள பிரதமராக இருந்தபோது நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளையும் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது பதவி ஏற்றுள்ள நேபாள பிரதமர் பகதூர் ட்யூபா இந்தியாவுடனான் நட்புறவை வலுப்படுத்தி வருகிறார். தான் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதமாக 21 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா – நேபாளம் இடையேயான ரயில் சேவையை இரு பிரதமர்களும் மீண்டும் தொடங்கி வைத்துள்ளனர். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.