திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

இலங்கையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு தடை: அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நேற்று நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட வரை தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் கடந்த சில நாள்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கொந்தளித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இலங்கையில் நேற்று அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது 
 
இதனால் பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது