1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Planes clash in midair in Canada

நேருக்குநேர் மோதிக்கொண்ட விமானங்கள்: விபரீதம் என்ன?

விமானங்கள்
கனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. 
 
இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தின் பைலட் உயிரிழந்தார்.
 
மற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி  ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உயிர்தப்பினர். 
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின், தினகரன் சந்திப்பு பலமுறை நடந்துள்ளது: ஓபிஎஸ்