ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: தலிபான்கள் காரணமா...?
மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் பலியாகினர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
அனர் டாரா மாவட்டத்தின் மேலாக ஹெலிஹாப்டர் வானில் சென்றூ கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஃபாரா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதலை நடத்தியது தாலிபான்கள் என்று ஒரு வதந்தியும் பரவி வருகிறது.
மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் இரண்டு விமானிகள் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மாகாணசபை உறுப்பினர் டாடுல்லா குவானே கூறுகையில் : மோசமான வானிலையின் காரணமாக இந்த ஹெலிகாப்டர் மலையின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாலிபான்கள் குழுமியுள்ளனரா என பார்பதற்காக மூத்த ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ரோந்து பணி மேற்கொண்டு பாதிகாப்புக்காக கண்காணிப்பது வழக்கம் .இப்படி கண்காணிப்பு நடத்தும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.
ஹெலிகாப்டர் விபத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.