வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:44 IST)

இந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அதிகாரி

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் விபத்துள்ளான விமானத்தை தவறவிட்ட இந்தோனேசிய நிதி அமைச்சக அதிகாரியான சோனி செடியாவான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
 
இதுகுறித்து பேசிய அவர் இந்த விமானத்தில் தான் நான் பயணம் செய்திருக்க வேண்டியது. இருப்பினும் வீட்டிலிருந்து காரில் வரும் போது டிராபிக் அதிகமாக இருந்ததால் விமானத்தை பிடிக்க முடியவில்லை. நல்ல வேலையாக விமானத்தை தவறவிட்டதால் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன் என படபடப்புடன் அவர் கூறியிருக்கிறார்.