திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (16:02 IST)

குடிபோதையில் விமானத்தை இயக்க தயாரான பைலட் கைது

போர்ச்சுகல் நாட்டில் குடிபோதையில் விமானத்தை இயக்க தயாரான பைலட்ட்டை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் ‘போர்ச்சுக்கல் ஏர்லைன்’ என்ற விமானம் 106 பயணிகளுடன் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தது.
 
விமானத்தை இயக்கவந்த 2 பைலட்டுகளில் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார். இதுகுறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து விமானத்தின் என்ஜின் அறைக்கு சென்ற போலீசார் குடிபோதையில் தள்ளாடிய பைலட்டை கைது செய்தனர். பைலட் குடிபோதையில் இருந்ததால் ஸ்டட்கார்ட்டில் இருந்து லிஸ்பன் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.