ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (16:15 IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் கைது

தெலுங்கானாவில் காவலர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஐதராபாத் நகரில் மெட்சல் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிரிஷ் ராவ் (51). குடிபோதையில் இருந்த இவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். கிரிஷ் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல வாகனங்கள் சேதமாயின.
 
பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கும் வேலையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இந்த காவலரை என்ன செய்வது என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய காவல் துறை உயரதிகாரி ஒருவர், குடித்து விட்டு விபத்து ஏற்படுத்திய கிரிஷ் ராவை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.