1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:56 IST)

குடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை இயக்க வந்த பெண் விமானி

மங்களூரில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க பெண் விமானி ஒருவர் குடிபோதையில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
கர்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு துபாய்க்கு 180 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை இயக்க துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் விமானி ஒருவர் வந்துள்ளார்.
 
அவர் தள்ளாடியபடி வந்ததால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அவரை மருத்துவ சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேர மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து அந்த விமானம் மாற்று விமானி மூலம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அந்த பெண் விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.