வெடித்து சிதறிய ராணுவ விமானம்; 17 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி!

Flight Crash
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:34 IST)
பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் வெடித்து சிதறியதில் 17 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு சொந்தமான சி-130 ராணுவ விமானம் 92 ராணுவ வீரர்களை சுமந்தபடி தெற்கு ஜோலோ ஐலேண்டிற்கு பயணமாகியுள்ளது. விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையிலிருந்து விலகியதால் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் நடந்த இந்த கோர விபத்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :