வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (21:39 IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.

சமீப காலமாக அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது.  தற்போது,  சசிகலா நாள்தோறும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப்பொதுச்செயலாளருமான பழனியப்பன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.  இது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.