திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (15:18 IST)

பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயலுக்கு 100 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பிலிப்பைன்ஸ் நாடு ஆண்டுந்தோறும் சுமார் 20 புயல்களை எதிர்கொண்டு வருகிறது. நேற்று பிற்பகல் நாட்டின் தென்பகுதியை சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. டெம்பின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் மிண்டானாவ் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
புயல் காற்றுடன் பெய்த கனமழையால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். உயிர் சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
 
இன்று பிற்பகல் நிலவரப்படி சுமார் 100 சடலங்கள் மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.