வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:24 IST)

இலங்கையில் விரைவில் மக்கள் புரட்சி வெடிக்கும்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை

srilanka
இலங்கையில் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும் என இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதும், இதனால் நாட்டுமக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தினர் என்பதும் தெரிந்ததே
 
 இந்த போராட்டத்தை அடுத்து வரும் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றுள்ள நிலையில் மக்களின் போராட்டம் தணிந்து உள்ளது
 
ஆனால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரான அனுரா குமார திஸ்சநாயகே எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
பொருளாதார நெருக்கடியால் 1 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டனர் என்றும் வணிகம் சீர்குலைந்து விட்டது என்றும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்றும் எனவே மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கோத்தபாய ராஜபக்ஷவை விரட்டி அடித்தது போல் ரணில் விக்ரமசிங்கேயையும் விரட்டி அடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.