செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:03 IST)

பாஜகவினர் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் நடத்தும் போராட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

கோவையில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகி இல்லம் மற்றும் பாஜக அலுவலுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இது சம்மந்தமாக குற்றவாளிகள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு சில சம்பவத்தின் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மற்றும் திமுக அரசை கண்டித்து இன்று மாலை சிவானந்தகாலனி பகுதியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் கோவை மாநகரத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.