1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2022 (22:35 IST)

சிரியாவில் அகதிகள் படகு படகு மூழ்கி விபத்து!

syria
இலங்கையைப் போல் லெபனான் நாட்டிலுல் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால், ஆயிரக்கணக்கான மகக்ள் வேலை இழந்து வறுமையின் பிடிவில் வாடுகின்றனர். இதனால், உணவு, உடை, மருத்துப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.

எனவே தம் தம்மையும் தன் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொருட்டு,   அண்டை நாடுகளுக்குச் சென்று தஞ்சம் அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த  நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிரியாவுக்கு 100 பேருடன் ஒரு அகதிகள் படகு சென்றது,. ஆனால், டார்டவுஸ்  அருகில் சென்றபோது,  படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவர் சிரியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்ல், 20 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.