வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:56 IST)

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராட்டம்: லண்டனிலும் போராட்டம் செய்யும் பெண்கள்

iran
ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஜாப் அணியாத பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து ஈரான் அரசுக்கு எதிராக பெண்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் இதனால் ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பரவி போராட்டமும் பரவி வருகிறது. இந்த போராட்டம் தற்போது லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாகவும் இதனையடுத்து நடத்தப்பட்ட தடியடியில் 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன