வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (15:12 IST)

பல நாட்கள் கழித்து கப்பலை விட்டு வெளியேறும் பயணிகள்..

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் 14 நாட்கள் கழித்து வெளியேறியுள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து திரும்பிய சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அக்கப்பலில் இருந்த அனைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லதாவர்களை கப்பலில் இருந்து வெளியேற்ற அனுமதி வழங்கப்பட்டது. 14 நாட்களுக்கு பிறகு சுமார் 500 பேர் மட்டுமே வெளியேறுவார்கள் என கூறுகின்றனர். மற்றவர்களை வெளியேற்ற இன்னும் மூன்று நாட்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.