1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Cats dogs wearing virus mask

பூனைக்கும் இந்த கதியா?? கொரோனா மாஸ்க்குடன் சுத்தும் செல்லபிராணிகள்

கொரோனா
சீனாவில் கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தங்களது செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்புக்காக முகமூடிகளை அணிவித்து வருகின்றனர்.

சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து சீனாவில் பலரும் தற்காப்பிற்காக முகமூடிகளை அணிந்து வருகின்றனர்.

அதே போல் தாங்கள் வளர்க்கும் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளுக்கு முகமூடிகளை அணிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸால் செல்லப்பிராணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், பாச மிகுதியால் தங்களது செல்லப்பிராணிகளுக்கும் முகமூடி அணிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்
கண்டபடி வாய் விட்ட சீனியரை அடக்கி வைத்த திமுக தலைமை!!