செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (15:06 IST)

முடிவுக்கு வந்த கப்பல் தத்தளிப்பு: அபாயத்தில் 542 பயணிகள்!!

ஜப்பான் கப்பலில் 542 பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. நேற்று ஒரே இரவில் 200 பேர் உயிரிழந்ததை அடுத்து சீனாவில் மட்டும் கொரானா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,009 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் 75,213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவ பணியாளர்கள் 3,019 பேரும் அடக்கம். அதோடு இதில் 12.057 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில், கொரொனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 14 நாட்களாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸில் உள்ள பயணிகளை வெளியேற்றும் பணி துவங்கி உள்ளது. இந்த பணி முடிய சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

இந்த கப்பலில் 542 பயணிகள் தெரியவந்துள்ளது. முன்னதாக 400 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் அரசு கூறிய நிலையில் தற்போது புதிதாக 88 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.