திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:28 IST)

பயங்கரவாதத்துக்கு உதவும் பாகிஸ்தான்… தொடர்ந்து க்ரே பட்டியலில் சேர்ப்பு!

பயங்கர வாதத்தை ஒழிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபடாததால் க்ரே பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் நிதி நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து வருகிறது. மேலும் அவ்வாறு நடக்கும் நிதியுதவிகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாத நாடுகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியங்கள் நிதியுதவி அளிப்பதில்லை. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த அமைப்பு அறிவிக்கும் கிரே பட்டியலில் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்தியாவில் தேடப்படும் சில பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் பாகிஸ்தான் இந்த க்ரே பட்டியலில் நீடிக்கிறது.