1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:09 IST)

தீபாவளிக்குத் துணி வாங்கினால் ஆடு பரிசு… ஜவுளிக்கடை அறிவிப்பு!

திருவாரூரில் உள்ள நியு சாரதாஸ் என்ற ஜவுளிக்கடைதான் இந்த வித்தியாசமான் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பலரும் புத்தாடைகளுக்காக ஜவுளி கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஜவுளிக்கடைகளும் மக்களை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இதையொட்டி திருவாரூரில் உள்ள நியு சாரதாஸ் கடை உரிமையாளர் மணியமுதன் தன் கடையில் ஜவுளி வாங்குவர்களுக்கு குடுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று பேருக்கு ஆடு பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அவர் கடைக்கு அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.