1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Pakistan meet heavy earthquake today

பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! – 20 பேர் பலி, 200 பேர் படுகாயம்!

Pakistan
பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயில் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் நவராத்திரி திருவிழா ஆரம்பம்!