திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (07:53 IST)

இன்று முதல் நவராத்திரி திருவிழா ஆரம்பம்!

இன்று முதல் நவராத்திரி திருவிழா ஆரம்பம்!
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்ற நிலையில் இன்று முதல் நவராத்திரி நிகழ்ச்சி தொடங்கியுள்ளதை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்
 
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் சிம்ம வாகனத்தில் ஆயிரமாயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாக புறப்பட்டு ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்கிறார்
 
பொதுமக்களின் பயங்களைப் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து வெற்றி பெற்றது அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி நாளில் என்பது குறிப்பிடதக்கது. சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் மீண்டும் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி அளித்தது விஜயதசமி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் நவராத்திரி பண்டிகையை ஒன்பது நாட்கள் அனைவரும் கொண்டாடுகிறோம்